
ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்க கடந்த 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட திட்டம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகையாக ரூபாய் 1000 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி இல்லாதவர்கள் யார் என்பதை சிறப்பு திட்ட செயலாக்கக்துறை விளக்க குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில், ரூபாய் 25 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்ப பெண்கள். ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் தொழில் வரி செலுத்துபவர்கள். அரசு பணிகளில் அதாவது மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் ஆகிய பணிகளில் உள்ளவர்களின் குடும்பப்பெண்கள்.
இதனை அடுத்து சொந்த பயன்பாட்டுக்கு கார் வைத்திருப்பவர்கள், டிராக்டர், கனரக வாகனங்கள் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி இல்லாதவர்கள். மேலும் ஓராண்டுக்கு ரூபாய் 50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர் குடும்பங்கள். மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு வகையை சேர்ந்த குடும்ப உறுப்பினராக இருக்கும் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி கிடையாது என விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.