தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் என அனைவருக்கும் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் காணொளி மூலமாக பேசிய முதல்வர், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கிராமப்புற பெண்கள் அதிகமாக பயனடைகிறார்கள். ஆயிரம் ரூபாய் என்பது பெண்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கு பெரும்  உதவியாக இருக்கும். மேலும் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகமாக வழி வகுத்திருக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.