தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டமானது செப்டம்பர் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த  திட்டத்திற்கான இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி உடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விடுபட்ட குடும்பத்தலைவிகளின் வசதிக்காக வருகின்ற ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மகளிர் உரிமைத்தொகைக்காக திட்டமிடப்பட்டிருந்த முகாம்கள் நடைபெறாது எனவும் இதற்கு பதிலாக தமிழகம் முழுவதும் 34,000 இடங்களில் வருகின்ற ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறக்கூடிய முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.