மகரம் ராசி அன்பர்களே,

இன்று துன்பங்கள் பணி போல் விலகி செல்லும். மகிழ்ச்சியான நாளாக இன்று இருக்கும். அனைவரும் உங்களைப் பார்த்து வியந்து போவார்கள். நல்ல மனதிற்கு சொந்தக்காரராக காணப்படுவீர்கள். எதார்த்தமாக செயல்படுவீர்கள். முழு முயற்சியுடன் வெற்றி பெற முடியும். புது புது யோசனைகள் மனதில் தோன்றும். அலுவலகத்தில் பணி சுமை கூடினாலும். சக ஊழியர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.

கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். இன்று பெண்கள் யோசனையுடன் காணப்படுவீர்கள். செய்யும் செயலை நிதானமாக செய்யுங்கள். சுறுசுறுப்புடன் பணிகளை மேற்கொள்ளுங்கள். சமையல் செய்யும்போது கவனமாக இருங்கள்.

இன்று மாணவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். கல்வி பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். விளையாடும் போது சக மாணவர்களுடன் கவனமாக இருங்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்