கும்பம் ராசி அன்பர்களே,

இன்று அரசாங்க பணியில் முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தைரியமான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். எதிர்த்து பேசியவர்கள் விலகி செல்வார்கள். இன்று அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் ஏற்படும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். பொறுமையாக எந்த செயலையும் செய்வது நல்லது.

அடுத்தவர்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள். காரியங்களில் அனுகூலம் ஏற்படும். பணியில் இருந்த தொய்வு விலகும். உற்சாகமாக பணிகளை மேற்கொள்வீர்கள். வீண் செலவுகளை தவிர்க்கவும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

மன அழுத்தத்துடன் காணப்படுவீர்கள். கையில் காசு பணம் புரளும். இன்று மாணவர்கள் லட்சிய நோக்குடன் கல்வி அமைத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்