தனுசு ராசி அன்பர்களே,

இன்று காரிய வெற்றிகள் கண்டிப்பாக ஏற்படக்கூடும். நன்மைகள் உங்களைத் தேடி வரும். உயர் அதிகாரியிடம் பணிவோடு நடந்து கொள்வது நல்லது. எதிர்பார்த்த காரியம் சாதகமாக நடந்து முடியும். எதிர்பாராத தன லாபம் ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புது ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.

தேவையான நிதி உதவி கிடைக்கும். வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். தொழிலில் வெற்றி இருக்கும். அனுகூலமான நல்ல பலனை பெற முடியும். எதிர்ப்புகள் விலகும். இன்று பெண்கள் திறமையால் வெற்றி பெறுவீர்கள். யோசித்து முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

நல்லவர்களின் நட்பு கிடைக்கும். இன்று மாணவர்கள் மூடநம்பிக்கைகளில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டாம். படிப்பில் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெளிர்மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்