கர்ப்பிணிப் பெண்களுக்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக திமுக அரசு முடக்கி உள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். அதாவது மாத்ரு வந்தனா  என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு  மத்திய அரசு ரூ. 257 கோடி நிதி வழங்கியிருப்பதாகவும், அந்த நிதி கர்ப்பிணி பெண்களுக்கு சென்று சேரவில்லை எனில் அந்த நிதி எங்கே செல்கிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கும் ரூ.14,000 திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வழங்கப்படவில்லை என அண்ணாமலை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், அத்திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு தடையின்றி நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.