கோயமுத்தூர் மாவட்டத்திற்கு அருகில் ஊட்டி மற்றும் குன்னூர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பல சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கோயம்புத்தூரில் இருந்து சரியாக 43 கிலோமீட்டர் தொலைவில் அதாவது கோவைக்கும் குன்னூறுக்கும் இடையே லாஸ் அருவி அமைந்துள்ளது. இந்த இடத்தில் 30 அடி உயரத்தில் தண்ணீர் அழகே வடிவாய் கொட்டுகிறது.

கோயம்புத்தூரில் இருந்து சரியாக 35 கிலோமீட்டர் தொலைவில் வைதேகி அருவி மற்றும் குரங்கருவி ஆகிய இரண்டு அருவிகள் நிறைந்துள்ளன. இந்த இடத்தில் பசுமை நிறைந்த இடங்களை பார்க்கலாம். இங்கிருந்து ஆழியார் அணையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோயம்புத்தூர் அருகாமையில் உள்ள உலகப் புகழ்பெற்ற இடங்களில் கோவை குற்றாலமும் ஒன்று. இது சராசரியாக கோவையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த புகழ்பெற்ற சிறுவாணி அணை இந்த நீர்வீழ்ச்சிக்கு மேல் கட்டப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரைச் சுற்றி சுமார் 85 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடங்களை ஊட்டி என்று அழைக்கிறோம். இங்கு சென்றால் குளிர்ச்சியாகவும் மனதிற்கு இதமாகவும் இருக்கும். மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் பாரம்பரியமிக்க மலை ரயிலில் பயணிப்பது அளவில்லாத இன்பத்தை தரும்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சரியாக 50 கிலோமீட்டர் தொலைவில் அமராவதி அணை அமைந்துள்ளது. இங்கு பேருந்து வசதிகள் உள்ளதால் வாகனத்தில் செல்லலாம். மேலும் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையை கண்டு ரசிப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.