புதிய OTT தொடர் ஒன்றின் ப்ரொமோஷன் நிகழ்வில் ஏற்பட்ட கைகலப்பு  சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரியாலிட்டி ஷோ நட்சத்திரங்களான ராஜத் தலால் மற்றும் ஆசிம் ரியாஸ் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கைகலப்பாக மாறியது. இந்த நிகழ்வில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மற்றும் நடிகை ரூபினா திலக் ஆகியோரும் இருந்தனர். இருவரையும் பிரிக்க முயன்ற ஷிகர் தவான், சூழ்நிலையை அமைதிப்படுத்த முயற்சித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில், வாக்குவாதம் தாண்டி தள்ளும் நிலைக்கு சென்ற ராஜத் மற்றும் ஆசிம் இருவரையும் ஷிகர் தவான் கட்டுப்படுத்த முயல்வதும், அருகில் இருந்த ரூபினா திலக் அதிர்ச்சியடைந்த முகப்பாவனையுடன் நிற்பதும் காணப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.