பொதுமக்களுக்கு போலீஸ் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தம் வகையில் 2 பெண் காவலர்கள் செய்த விஷயம் பாராட்டுக்குரியதாக மாறியுள்ளது. அதாவது டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் சீமாதேவி மற்றும் சுமன் ஹூடா ஆகிய இரு பெண் காவலர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் காணாமல் போன குழந்தைகள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 9 மாதத்தில் மொத்தம் 104 குழந்தைகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இந்த குழந்தைகளுக்கு 4 முதல் 17 வயது இருக்கும். இவர்கள் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக ஹரியானா, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டதோடு தெரியாத மொழிகளால் சிரமத்தை அடைந்தனர். மேலும் பல்வேறு சிரமத்திலும் சவால்களை எதிர்கொண்டு குழந்தைகளை பத்திரமாக மீட்டு அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.