
கடலூர் மாவட்டத்தில் உள்ள கொங்கராயனூர் பகுதியில் சோனியா என்ற 26 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஆவடி ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக கார் ஓட்டுனரான முகிலன் (27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதில் மகள் முகிலனுடன் இருந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்த சோனியா தன் கணவனை தொடர்பு கொண்டு மகளை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் பிறகு சோனியா மற்றும் முகிலன் இருவரும் தங்கள் மகளுடன் கடற்கரையில் சென்று சுற்றி பார்த்தனர். இதைக் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி தன் கணவனை செல்போன் மூலம் அழைத்த சோனியா தான் விஷம் குடித்துவிட்டேன் எனவே மகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த முகிலன் தன்னுடைய உறவினர்களுடன் சொந்த சோனியாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில் தற்கொலை செய்வதற்கு முன்பாக சோனியா தன் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை முகிலனுக்கு செல்போனில் whatsapp மூலம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரியும் ஒருவருடன் எனக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில் அவரால் நான் கர்ப்பமானேன்.
நான் 3 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் முதலில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகிய அவர் கர்ப்பத்தை கலைக்குமாறு கூறினார். இது பற்றி நான் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தபோது அவர்கள் ஒரு தலைப்பட்சமாக என்னை மட்டுமே பார்த்தார்கள். பணிச்சுமை காரணமாக என்னுடைய கர்ப்பம் கலைந்து விட்டது.
அந்த நபர் உன் கணவனிடம் இருந்து விவாகரத்து வாங்கிவிட்டு கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிய நிலையில் கர்ப்பம் தானாக கலைந்ததால் மன உளைச்சலில் இருந்த நான் வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொண்டேன். என்னுடைய சாவுக்கு அந்த போலீஸ்காரர் மட்டும்தான் காரணம். இது பற்றி என் கணவரிடம் விசாரிக்க வேண்டாம் என்று இருந்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட போலீஸான ராஜுவை (28) கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..