
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக தற்போது பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
கிட்டத்தட்ட மூன்று நாட்களாக பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தும் நிலையில் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அதனை ஆரம்பத்திலேயே வீழ்த்தியது. இந்த போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்திற்கு நேற்று மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அங்கு போலீசார் உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.