இஸ்ரேல் ஹமாஸ் இடையே 40 நாட்களுக்கு கடந்து போர் நீடித்து வரும் நிலையில் ஹமாசுக்கு கத்தார் ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளும் ஈரானுக்கு இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் ஆதரவாக செயல்படுகின்றன. இதனிடையே ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஈரான் போர்க்களத்திற்கு வந்தால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கும் என்றும் இதனால் போர் மற்ற நாடுகளுக்கும் பரவும் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக உலக நாடுகள் கவலை தெரிவித்து வந்தது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் மற்றும் ஈரான அதிபர் ஹயதுல்லா இடையே சந்திப்பு நடந்துள்ளது. அப்போது தார்மீக மற்றும் அரசியல் ரீதியான ஆதரவு ஈரான் தரப்பிலிருந்து ஹமாஸ் அமைப்புக்கு கிடைக்குமே தவிர நேரடியாக போரில் ஈடுபடாது என்றும் பாலஸ்தீனத்தில் போரில் ஈரானின் ஈடுபாடு குறித்து எழுப்பப்படும் கோரிக்கைக்கு ஹமாஸ் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அதிபர் ஹயதுல்லா திட்டவட்டமாக ஹமாஸ் தலைவரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஈரான் இந்த முடிவில் உறுதியாக இருந்தால் போர் பரவல் குறித்த அச்சம் குறைந்துவிடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டது பற்றி ஈரானுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்படாதது தான் இந்த நிலைப்பாட்டிற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.