தற்காலிக ஊழியர்களின் போராட்டம் குறித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தற்காலிக ஊழியர்களை எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தற்காலிகப் பணி என்பது 11 மாத ஒப்பந்தம் மட்டுமே என்றும், இடையில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்படும் (Renewal) என்றும் அவர் விளக்கமளித்தார். இவர்கள் பணியில் சேரும்போது இட ஒதுக்கீடு (Communal Rotation) போன்ற விதிகள் பின்பற்றப்படாததால், இவர்களைப் பணி நிரந்தரம் செய்ய சட்டரீதியாக இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

​மேலும், இந்தப் போராட்டத்தின் பின்னணியில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு தனிநபரின் தூண்டுதல் இருப்பதாகவும், அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். “போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவது திமுக அரசின் நோக்கமல்ல, ஆனால் தூண்டிவிடப்படும் போராட்டங்களைக் குறைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்” என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.