இந்தியாவில் தினம் தோறும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக அரசு கடுமையான சட்டங்களை இயற்றினாலும் சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி குடிபோதையில் தந்தை ஒருவர் தன்னுடைய 13 வயது மகளை பலாத்காரம் செய்துள்ளார்.

ஒரு வாரத்திற்கு பிறகு சிறுநீர் போலீசில் புகார் அளித்துள்ளார். தாயின் இறப்பு காரணமாக போலீஸ் நிலையம் அணுக முடியவில்லை என்றும் சிறுமி கூறியுள்ளார். அவருடைய தாய் ஆகஸ்ட் 10ஆம் தேதி சுற்றுலா சென்ற போது உயிரிழந்துள்ளார். தற்போது பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.