
குஜராத் மாநில அகமதாபாத் பகுதியை சேர்ந்த 50 வயதான ஜிதேந்திர பவ்சர், தனது 3 வயது பேத்தியுடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பரபரப்பான சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் ட்ரக் ஓட்டி வந்த நபர் இவர்களது இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.
இதில் தாத்தா பேத்தி என இருவரும் வாகனத்தின் சக்கரத்திற்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து மது போதையில் வாகனம் ஓட்டிய ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.