
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் தொடர்பான ஆவணங்களை கேட்டது என்.ஐ.ஏ. போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் இருந்து வழக்கின் விவரங்களை என்.ஐ.ஏ கேட்டுள்ளது. ஜாபர் சாதிக்கின் பண பரிவர்த்தனைகள், வங்கி விவரங்கள், பழைய வழக்கு விபரங்களை கோரியது டெல்லி என்.ஐ.ஏ. ரூ 2000 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். போதை பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தீவிரவாத அமைப்புகளுக்கு சென்றுள்ளதா என விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக் வழக்கை தேசிய புலனாய் முகமை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கை விசாரித்து வரும் நிலையில் தேசிய புலனாய் முகமை அதிகாரிகள் விவரங்களை கேட்டுள்ளனர்.