நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் கலை கட்டியுள்ளது. மக்கள் புத்தாடை மற்றும் பட்டாசுகளை ஆர்வமுடன் வங்கி செல்கின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் ராம்கோட் பகுதியில் ஒரு பட்டாசு கடை அமைந்துள்ளது. இந்த கடையில் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு பட்டாசுகளை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு கடைக்குள் இருந்து பட்டாசுகள் வெடித்து நாலாபுரமும் சிதறியது.

இதனால் வாடிக்கையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக கூட்டத்தில் சிக்கியிருந்த நபர்களையும் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து அறிந்து தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.