தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் பாலமுருகன் என்னும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீசான நிலையில் 8 நாட்களில் வாத்தி திரைப்படம் 75 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் 30 கோடியும் ஆந்திராவில் 25 கோடியும் வசூலித்துள்ளது. இதனால் ஆந்திராவில் தளபதியின் வாரிசு வசூலை வாத்தி திரைப்படம் முந்தி உள்ளது. மேலும் வாத்தி திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் விரைவில் 100 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது