தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 50 நாள் நிறைவடைந்துள்ளது. இதை தளபதி விஜயின் ரசிகர்கள் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் கொண்டாடியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேலும் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ  தயாரிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியான நிலையில் அந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அதன் பிறகு சரத்குமார், பிரகாஷ்ராஜ், சாம் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

https://twitter.com/Siva52649265/status/1629719384490139648?s=20