தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் சூர்யா 42 திரைப்படம் 10 மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா 10 வேடங்களில் நடிக்கும் நிலையில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படத்தின் டிஜிட்டல் உரிமைகள் பல கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா 42 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது சூர்யா 42 திரைப்படத்தை 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியிடப் படக் குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.