தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி, பாகுபலி 2 போன்ற திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படமும் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆகி ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுக்குத்து பாடலுக்காக சமீபத்தில் இசையமைப்பாளர் கீரவாணிக்கு சர்வதேச அளவில் வழங்கப்படும் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் படத்திற்கு மேலும் 3 விருதுகள் வழங்கப்பட்டது.

இயக்குனர் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் சூப்பர் மேன் கதை சாயலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மகேஷ் பாபுவை வைத்து ராஜமவுலி இயக்கும் படத்தில் அமீர்கான் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் படத்தை வெளியிட ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும், சர்வதேச அளவில் இந்திய சினிமாவின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் வகையில் படத்தை எடுக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்கள் ஆயிரம் கோடி வசூலை கடந்து சாதனை புரிந்ததால் தற்போது மகேஷ் பாபுவை வைத்து அவர் இயக்கி வரும் படத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.