கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் கிச்சா சுதீப் மற்றும் உபேந்திரா ஆகியோர் தற்போது கப்ஜா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி மற்றும் மொழியாகி 7 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் சுமார் 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ஆர். சந்துரு தயாரித்து எழுதி இயக்கியுள்ளார். இந்நிலையில்  கப்ஜா  திரைப்படத்திற்கு கேஜிஎப் படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 3-வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடல் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.