தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் டான் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்து நிலையில் கடைசியாக மாவீரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு 70 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இதைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மறைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த்  வரதராஜனின் வாழ்க்கை கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்.

 

இந்தத் திரைப்படம் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்தத் திரைப்படத்தை அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், நடிகர் விஜய் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டிய நிலையில் தற்போது அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. மேலும் சுமார் 60 கோடி ரூபாய்க்கு அமரன் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் தளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.