
அட்சய திருதியை நாளில் தங்கம் விலையில் மாற்றமில்லை. அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை இன்று உயர்வை சந்திக்கும் என கூறப்பட்ட நிலையில் தங்கம் நிலையில் மாற்றம் இல்லை என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 71 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் நகை கடைகள் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. அட்சய திருதியை நாளான இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாததால் 20% வரை கூடுதலாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.