தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பண்பாடு மற்றும் தமிழும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை சேர்ப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் தமிழ் பாடமே படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக தனியார் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ போன்றவற்றில் தமிழ் பாடம் படிக்க முடியவில்லை.

இதனை மாற்றி அமைக்க வேண்டும் என கருத்தில் கொண்டு தமிழகத்திற்காக ஒரு கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு கல்விக் குழுவை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தினார். பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடம் இல்லை. ஆனால் நடப்பு ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ் பண்பாடு மற்றும் தமிழும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை சேர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எதற்காக பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்கள் பணியமனம் தற்போது நடைபெற்ற வருகின்றது. தமிழுக்கு அனைவரும் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் தமிழை முழுமையாக படிக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.