2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மத அடிப்படைவாத தலிபான்  அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. அது முதல் அந்நாட்டில் மனித உரிமைகளுக்கு எதிராக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதும் ஏராளமான பொருளாதார தடைகளை அந்நாட்டு மீது அமெரிக்கா விதித்தது. இதனால் மிகப்பெரிய அளவில் பொருளாதார சரிவை ஆப்கானிஸ்தான் சந்தித்தது.

இந்நிலையில் ஆப்கானில் ஆட்சி அமைத்து இரண்டு வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்காவும் தலிபானும் கத்தார் நாட்டில் சந்தித்துள்ளது இந்த சந்திப்பில் அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தானின் நிதி அமைச்சர் அமீர்கான்  வெளியேறவு தங்கள்  நாட்டுக்கு எதிரான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.