
ஈரோடு மாவட்டத்தில் மாதப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ரூ.2 லட்சம் கடனுக்காக 12 ஆண்டுகளாக மாதம் ரூ.20,000 வட்டி செலுத்தியுள்ளார். அவர்கள் மேலும் ரூ.22 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக மாதப்பன் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினருடன் வந்து மனு அளித்துள்ளார்.
ஊர் ஊராக சென்று பொம்மைகள், கயிறு விற்பனை செய்யும் மாதப்பன், கடந்த 3 மாதமாக வட்டி செலுத்தாததால் ரூ.22 லட்சம் மொத்தமாக செலுத்த வேண்டும் என மிரட்டுவதாக மாதப்பன் கூறியுள்ளார்.