இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி உலகம் முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாகும் என்று பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் 2 படத்தின் டீசர் மார்ச் 1-ஆம் தேதி வெளியாகும் என்று புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.