
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன்-2 படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் ரசிகர்களை கவரும் விதமாக பொன்னியின் செல்வன் -2 படக்குழு கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதாவது, பொன்னியின் செல்வனில் குந்தவையின் மற்ற பெயர்கள் என்ன..? என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி வீடியோவை பகிர்ந்ததோடு, உங்களின் பதிலை ஒரு செல்பி வீடியோவாக கமெண்ட் செய்யவும் என குறிப்பிட்டு உள்ளனர். இதன் காரணமாக ரசிகர்கள் தங்களின் பதிலை செல்பி வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகின்றனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக திரிஷா நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Can you tell us the other names of our princess Kundavai?#PS2 in cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX… pic.twitter.com/vAW3d1VFll
— Madras Talkies (@MadrasTalkies_) April 23, 2023