நகர்ப்புற உள்ளாட்சிகளின் பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளில் வசதிகள் குறித்தும் குறைகள் குறித்தும் qr கோடு மூலமாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் உள்ள பொது மற்றும் சமுதாய கழிப்பறை வசதிகளை மேம்படுத்தும் விதமாக அந்த கழிப்பறைகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு ஒவ்வொரு கழிப்பறைக்கும் க்யூ ஆர் கோடு உருவாக்கப்பட்டு கழிப்பறைகளில் பொருத்தப்பட்டு வருகின்றது.

அந்த கழிப்பறையில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் அனைத்து விவரங்களையும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இந்த கழிப்பறைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் கழிப்பறைகளில் உள்ள வசதிகளின் நிலை மற்றும் குறைபாடுகள் குறித்து தங்கள் கைபேசியில் qr கோடை ஸ்கேன் செய்து கருத்துக்களை பதிவு செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.