இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொது தேர்வு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு 202-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகளை நடத்த மாநில அரசுகளும் மத்திய கல்வி வாரியமும் தயாராகி வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பொது தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருவதால் மாணவர்களும் பொது தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் ஒடிசா மாநிலத்திலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடிய விரைவில் தேர்வுகள் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர்களுக்கு தேர்வில் நேர மேலாண்மையை பின்பற்றுவது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டதாக ஆசிரியர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு 40 நிமிடம் வகுப்புகள் போதாது என்றும் கூடுதலாக வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதை அடிப்படையாகக் கொண்டு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்புகளை நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.