
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் வன்னாரம் கிராமத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்குமார் என்ற வாலிபர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது தாயிடம் அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் காதலியின் தாய் தனது மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தார்.
இதனால் கோபமடைந்த ராஜ்குமார் தனது காதலியின் தாயை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் ராஜ்குமாரை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.