தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பலர் செல்வதால் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே நகர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கிருந்து ஜனவரி 12-ஆம் தேதி முதல் 14-ம் தேதி வரை 340 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோன்று பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பும் மக்களின் வசதிக்காக ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் 50 சிறப்பு பேருந்துகளும், 18, 19 ஆகிய தேதிகளில் 125 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் மேற்கண்ட 5 பேருந்து நிலையங்களையும் பயணிகள் எளிதில் அடையும் விதமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

அதன்படி  கேகே நகர் பேருந்து நிலையத்துக்கு 8 சிறப்பு பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்துக்கு 26 சிறப்பு பேருந்துகளும், பிராட்வே பேருந்து நிலையத்துக்கு 7 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது.  அதன்பிறகு தாம்பரம் ரயில் நிலையத்துக்கு கொருக்குப்பேட்டை, சோழிங்கநல்லூர், திருப்போரூர், கோவளம், திநகர், பிராட்வே, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு, அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து 115 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதன் பிறகு பூந்தமல்லிக்கு 57 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடைவதற்கு 128 இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.