
பொங்கல் வேஷ்டி, சேலையை இதுவரை வாங்காத பயனாளிகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி குடும்பங்களுக்கு அரசு சர்க்கரை, கரும்பு, இலவச வேஷ்டி,சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். ஒரு கோடியே 77 லட்சத்து 25 ஆயிரம் எண்ணிக்கையிலான வேஷ்டிகள் மற்றும் ஒரு கோடியே 27 லட்சத்து 64 ஆயிரம் சேலைகள் நியாய விலைக் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகை மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான மக்கள் பயன் பெற்றார்கள். அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன் பெறும் விதமாக வழங்கப்பட்டது. இதனையடுத்து வேஷ்டி சேலை வாங்காதவர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.