தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்படும். ஆனால் நடபாண்டில் பொங்கல் முடிந்து 10 நாட்கள் ஆகியும் இலவச வேட்டி, சேலை வழங்காததால் பன்னீர்செல்வம் இலவச வேட்டி சேலை வழங்குவதற்கு திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இலவச வேட்டி சேலை திட்டத்திற்காக 2022-23 ஆம் நிதி ஆண்டில் பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை வேட்டி சேலை வழங்காதது திமுக அரசின் நிர்வாக திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலைக்காக 500 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், 10 வடிவமைப்புகளில் சேலைகளும், 5 வடிவமைப்புகளில் வேட்டிகளும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இவற்றை பொங்கலுக்கு முன்பாகவே பொது மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் முதல்வர் உத்தரவிட்டிருந்ததாக செய்திகள் வெளியானது.

இது தொடர்பாக முதலமைச்சர் ஆய்வு செய்த புகைப்படம் வெளியான நிலையில் பொங்கல் முடிவடைந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை வேட்டி சேலை வழங்காதது கண்டனத்திற்குரியது. எனவே இலவச வேட்டி சேலைகள் வழங்காததற்குரிய காரணத்தை கண்டறிந்து உடனடியாக வேட்டி சேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனிவரும் பொங்கல் பண்டிகையில் பொங்கலுக்கு முன்பாகவே வேட்டி சேலைகளை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.