தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவர் இஎம்ஐ மூலம் மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார். மாதம்தோறும் அவர் சரியாக இஎம்ஐ செலுத்தி வந்துள்ளார். இந்த மாதம் சில காரணங்களால் அவரால் இஎம்ஐ செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில் நிதி நிறுவன ஊழியர்கள் அந்த வாலிபரிடம் சென்று இஎம்ஐ செலுத்தவில்லை என்றால் பைக்கை எடுத்து சென்று விடுவோம் என கூறினர். அவர்கள் அடிக்கடி வாலிபரை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்தனர். இதனால் நிதி நிறுவன ஊழியர்களின் கண்முன்னையை அந்த வாலிபர் பைக்கை தீ வைத்து எரித்த விட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.