
கோவை தனியார் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டார்.திமுக எம்பி மற்றும் கனிமொழி சந்திப்புக்கு பிறகு விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக கூறி அவரை பேருந்து உரிமையாளர் பணிநீக்கம் செய்துள்ளார்.ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்த நிலையில் பணிநீக்கம் செய்துள்ளார். காஞ்சிபுரத்தில் இருந்து சோமனூர் சென்று விட்டு திரும்பிய நிலையில் உரிமையாளர் நேரில் அழைத்து வாக்குவாதம் செய்ததாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இது குறித்து ஷர்மிளா, பேருந்து உரிமையாளரிடம் நான் முன்பே கனிமொழி எம்பி வருவது பற்றி கூறிவிட்டேன், அப்போது அது பற்றி அவர் எதுவும் பேசவில்லை. கனிமொழி வந்து சென்ற பிறகு நான் விளம்பரத்திற்காக ஆட்களை பேருந்தில் ஏற்றுவதாக கூறி தன்னை பணிநீக்கம் செய்து விட்டார் என்று கூறி கண்ணீர் மல்க தெரிவித்தார்.