சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 710 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கான நடைமேடை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடைமேடை 1, 2இல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, குட்டம், குலசேகரம், சிவகாசி, செங்கோட்டை, திசையன்விளை. * 3 இல் காரைக்குடி, கீரமங்கலம், சாயல்குடி, சிவகங்கை. * 4,5இல் குமுளி, கும்பகோணம், தஞ்சாவூர், திண்டுக்கல். *6இல் குருவாயூர், கோவை, சேலம். 7இல் செஞ்சி செங்கம் உள்ளிட்ட இடங்களுக்கான பேருந்துகள் புறப்படுகின்றன