சென்னையில் மாநகரப் பேருந்துகளில் மூத்த குடி மக்களுக்கான இலவச பஸ் பயண டோக்கன்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பாண்டில் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணம் இல்லா  பஸ் பயண டோக்கன்கள் வழங்கும் பணி, புதிய அடையாள அட்டை வழங்குதல், அதனை புதுப்பித்தல் ஆகிய பணிகள் 42 மையங்களில் நடைபெற இருக்கிறது.

இந்த பணிகள் ஜூன் 21ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடைபெறும். இவைகள் வழக்கம் போல் அந்த பணிமனை அலுவலகங்களிலும் வழங்கப்படும். இதனை மூத்த குடிமக்கள் பெற அடையாள அட்டை, குடும்ப அட்டை, 2 வண்ண புகைப்படங்கள் போன்றவற்றை கொண்டு வரவேண்டும். மேலும் இந்த அறிவிப்பை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.