
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர்வில் சமீபத்தில் அரசு பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தகாத முறையில் தொட்டு நடத்துனர் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சமூகம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து நடத்துநரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது கர்நாடகாவில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
I was so scared, I didn’t want him to be there near me even for a minute and ask the conductor to de-board him from bus, should have taken him to police, I feel guilty of not handing this rapist to police https://t.co/q415WuUq9H
— Walsssss (id/iot) (@repsaccore) May 1, 2025
அதாவது அரசு பேருந்தில் ஒருபெண் பயணியை கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆண் பயணி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக வீடியோ எடுத்த நிலையில் அந்த நபர் தன்னுடைய முகத்தை ஒரு துணியால் மறைக்கிறார். அதோடு தான் எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறுகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.