
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் உப்பல்வாடியை சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் அவரது காதலர் பேசாமல் இருந்துள்ளார். இதனால் அந்த பெண் தனது சகோதரன் மற்றும் மற்றொரு நண்பரை அழைத்துக் கொண்டு காதலனை சந்திக்க சென்றுள்ளார். அங்கு காதலனிடம் தன்னிடம் பேசுமாறு கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண்ணின் சகோதரர் காதலனை கத்தியால் குத்தியுள்ளார். அவருடன் சேர்ந்து அந்த பெண்ணும் தனது காதலனை தாக்கியுள்ளார். இதனால் நிலை தடுமாறி காதலன் கீழே விழ மூவரும் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றனர்.
அவ்வழியாக சென்றவர்கள் இளைஞனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஒருவரை கைது செய்துள்ளனர். மற்ற இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.