கேரள மாநிலம் திருவனந்தபுரம் நந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா தங்கம்‌ -ஜீன் பத்மம் தம்பதியினர். ராஜா ஓய்வு பெற்ற பேராசிரியர். பத்மம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வந்தார். இவர்களது மகன் கேதல் ஜின்சன்(34) கம்ப்யூட்டர் இன்ஜினியர். மகள் கரோலின் டாக்டர். இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இவர்களின் வீட்டு வேலைக்கார பெண்ணான லதா என்ற பெண்னும் இவர்களின் வீட்டில் தங்கி இருந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு ராஜா, பத்மம், கரோலின் மற்றும் லதா ஆகிய நான்கு பேரையும் கேதல் ஜின்சன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.பின்பு கொலை செய்யப்பட்டவர்களின் உடலை பிளாஸ்டிக் கவரில் கட்டி படுக்கை அறையில் வைத்துள்ளார்‌. 3 நாட்களுக்கு பிறகு வீட்டிற்குள் துர்நாற்றம் வீசியதால் இறந்தவர்களின் உடலை வீட்டு கழிவறையில் வைத்து எரித்துள்ளார். அப்போது வீடும் சேர்ந்து எரிந்ததால் கேதல் ஜின்சனுக்கு தீக்காயம் ஏற்பட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

வீடு தீப்பிடித்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜா, அவரது மனைவி பத்மம், கரோலின் மற்றும் வேலைக்கார பெண் லதா ஆகியோரின் உடல் கருகிய நிலையில் கிடந்தது. இது குறித்து அறிந்த போலீசார் விசாரணை நடத்திய போது கேதல் ஜின்சன் நான்கு பேரையும் கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இதனால் தனிப்படை அமைக்கப்பட்டு கேதல் ஜின்சனை பிடித்த போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூறியதாவது, தனது தந்தை தன்னை அடிக்கடி திட்டியதால் அவர் மீதுள்ள கோபத்தால் இப்படி செய்ததாக ஒப்புக்கொண்டார். சில நேரங்களில் ஜின்சன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல செயல்படுவார்.

இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜின்சனை திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சொந்த குடும்பத்தையை கொலை செய்த கேர்ல் ஜின்சனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சுமார் ரூபாய் 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையை கேதல் ஜின்சனின் தாய் மாமாவிடம் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.