இன்று காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையில் செல்போன் இருக்கிறது. சிறிய குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கும் கூட தாய்மார்கள் அவர்களுக்கு செல்போன் கொடுத்து பழக்கி வருகிறார்கள். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் செல்போன் இல்லாமல் சாப்பிட முடியாத அவல நிலைக்கு சென்றுள்ள காட்சி வேதனையை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் சாப்பாடு நடக்கும் இடத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ அல்லது ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் வேதனை அடைய செய்துள்ளது.

இன்றைய உலகில் குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டு அவர்களை தவறாக வழிக்கு செல்வதற்கு பெற்றோர்கள் தான் காரணமாக இருக்கிறார்கள். சாப்பிடும் போதும், உறங்கும்போதும், அழுதாலும் எதற்கெடுத்தாலும் செல்போன் தான் குழந்தைகளுக்கு தீர்வாக இருக்கிறது, ஆனால் இந்த தவறை பெட்ரோல் செய்தால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை இதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.