உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் அருகே 2 சரக்கு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதனால் 8 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக லக்னோ-வாரணாசி இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அதோடு சரக்கு ரயில்களின் இரண்டு எஞ்சின்களும் பலத்த சேதமடைந்திருக்கின்றன. இதனிடையே பல ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது. கவிழ்ந்த ரயில் பெட்டிகளை கிரேன் உதவியுடன் மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.