பெட்ரோலிய பொருட்கள், மது பானம் உள்ளிட்ட சில பொருட்கள் இதுவரையிலும் GST வரம்புக்குள் கொண்டுவரப்படாமல் இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க அவற்றை GST வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை பலதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லியில் தொழிலமைப்பு ஒன்றின் உறுப்பினர்களுடன் உரையாடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அப்போது பெட்ரோலிய பொருட்கள் பற்றி மத்திய நிதியமைச்சர கூறியதாவது, மாநில அரசுகள் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் பெட்ரோலிய பொருட்களை GST  வரம்புக்குள் கொண்டுவர இயலும் என கூறியுள்ளார். மேலும் மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும்படி மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.