கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்  தொடங்கப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்நிலையில் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் வந்தே பாரத் ரயிலில் அதிகமாக பயணம் செய்த ரயில் வழித்தடங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் மும்பை – காந்திநகர் வழித்தடத்தில் கடந்த ஜனவரி மாதம் வரை அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர். பிலாஸ்பூர் – நாக்பூர் வழித்தடத்தில் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

எட்டு ரயில்கள் நிகழாண்டு வரையில் 20 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இந்த ரயில்களின் எண்ணிக்கையானது பிப்ரவரி மாதம் 10 எட்டியுள்ளது. மேலும் கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட சென்னை – மைசூர் வழித்தடத்தில் 42 முறை இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதேபோல் வந்தே பாரத் ரயில்களுக்கு முன்பதிவு செய்து இருப்பவர்கள் மற்றும் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.