மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், வெறும் 3 வயதே ஆன ஒரு சிறுமியை 65 வயது முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது.
இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருடன் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மும்பை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்தது.
பிஞ்சு குழந்தையைக் கொன்ற அந்த காமுகனுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் ஆவேசத்துடன் முழக்கமிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் போலீசார் முதியவரைச் சிறையிலடைத்துள்ள நிலையில், பதற்றம் குறையாததால் அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
