பிரபல ஹாலிவுட் நடிகை பிரிஸ்கில்லா பாய்ண்டர் 100 வயதில் காலமானார். கடந்த 1976-ஆம் ஆண்டு பிரிஸ்கில்லா ஹாலிவுட்டில் அறிமுகமானார். இதனையடுத்து 2008-ஆம் ஆண்டு வரை தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

ப்ளூவேல்வெட், டிஸ்டர்ப் போன்ற மெகா ஹிட் படங்களில் பிரிஸ்கில்லா நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் ஃப்ளாஷ், டல்லாஸ் போன்ற பிரபலமான தொடர்களிலும் நடித்துள்ளார். பிரிஸ்கில்லாவின் மறைவிற்கு அவரது ரசிகர்களும், திரை துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.