
மலையாள திரையுலகில் பழமையான நடிகராக பரிச்சயமான ரவிகுமார் காலமானார் என்ற செய்தி திரையுலகை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 75. வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்குகள் நாளை சென்னை போரூரில் நடைபெறவுள்ளது.
1967ஆம் ஆண்டு ‘இந்துலேகா’ திரைப்படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ரவிகுமார், அதன் பிறகு அனுபல்லவி, அங்காடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 1976-ல் மது நடித்த ‘அம்மா’ திரைப்படம் மூலம் மலையாள ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் அவரது மரணம் திரையுலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.